படமும் செய்தியும்

Wednesday, May 21, 2008

"செமகுத்து" - னா அது இதாங்க!
முதன்முதல் காதுகுத்தலைக் கண்டுபிடித்தவன், இந்தப்பெண்மணியை காண நேர்ந்தால் என்ன நினைப்பான்/செய்வான்? என்ன வேண்டுதலோ? அம்மணி இப்படி முகம் முழுக்க‌ இப்படி குத்தோகுத்து என்று குத்திக்கொண்டார் என்று நினைக்கிறீர்களா? சரி அதை விடுங்கள். தோராயமாக முகத்தில் எத்தனை மாட்டல்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சரியாக 5920 மாட்டல்களைக் குத்தி உலகிலேயே மிக அதிகமான மாட்டல்களை குத்தி மாட்டியவர் என்று கிண்ணஸ் ரெக்கார்ட் சான்று வழங்கிவிட்டது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரருகேயுள்ள ராயல் மைல் எனற இடத்தைச் சார்ந்த எலைன் டேவிட்சன் தான் இவர்! என்ன, எப்படி இவர் சாப்பிடுவார்ன்னு பாக்கிறீங்களா? அது அவரோட கவலைங்க!

காலை டிபன் ரெடி! சாப்பிடலாமா?
ஹேம்பர்கர்,கொஞ்சம் உருளை வறுவல்,கொஞ்சம் சாலட் அவ்வளவுதான்! நேத்திக்குவரை இந்த காலைச் சிற்றுண்டி வெறும்$150டாலர்தான்! ஆனா, இன்னையிலிருந்து வெலவாசி ஏறிப்போனதால கொஞ்சம் வெலையை கூட்டிருக்கோம்ன்னு நியூயார்க் வால் ஸ்ட்ரீட் பர்கர் ஷாப்பி அறிவித்துள்ளது. எவ்ளோ? 175டாலர்! நம்ம ஊர் ரூபாயில் சும்மா 700ரூபாய்! ஒரு பர்கர் நாலுரூபாய் விக்குது! ஆன நியூயார்க் நகரத்துல இந்தக் கடை எப்பவும் காஸ்ட்லியான கடைதாங்க!
என்ன வாய தெறந்துகினு ப்ளேட்ல இருக்குறத லவட்டுறதுக்கா? இல்ல வெலையப் பாத்தா?



இது எந்த கெரகத்துல இருந்து? செவ்வாயா? புதனா? என்று நீங்கள் வடிவேல் ஸ்டைலில் கேட்டுக்கிட்டு இருக்காதீங்க!

ஹெச் ஐ வி, எய்ட்ஸ் இதெல்லாத்தோடயும் வாழ்க்கையில போராடிக்கிட்டு இருக்குறவங்களுக்காக நிதி திரட்டியளிக்க 16வது ஆண்டு வாழ்க்கை பந்து நிகழ்ச்சியில் வியன்னாவின் சிட்டிஹாலில் நூதன அலங்காரத்தில் தோன்றும் பெண் தான் இவர்!