ஒரு மில்லியன் டிகிரி வெப்பத்தைக் கக்கினாலும் உன் கதிர் கரங்களை இதமாய் எங்களை நோக்கி
அனுப்பும் ரகசியம் சொல்வாயா?
எழுத்தாளர்களின் பாடுபொருளே மரங்களின் எச்சமாய்ச் சொச்சமாய் நீ சொல்லும் சேதிதான்
என்ன?
நிர்வாணமாய் நிற்கும் என்னைப் பார்த்து நீ நாணும் அழகே தனிதான்!

சிறகுகள் உதிர்த்து மரித்த சோகத்துக்கு வெண்பட்டு விரித்து எம்மை குளிர்ச்சிப்படுத்துகிறாயோ!
நிறம் மாறும் இலைப்பூக்கள்!
உயிர் துறக்கும் முன்புகூட உங்கள் கண்ணுக்கு விருந்து படைத்துப் போவேன்!
சூரியப் பூக்களே நீங்கள் மலர்ந்து
சிரிப்பது யாருக்காக?
எம் தாகம் தீர்க்க அடித்துப் புரண்டுவரும் அழகு நதியே நீயின்றி நாங்களில்லை!
இலைகள் உங்களை விட்டுப்போனால் என்ன? உங்களைப் போர்த்திக் கெளரவிக்க நானில்லையா
என்று பூமிச் சபையில் வெண்பட்டு போர்த்தி
மகிழ்கிறாயோ?
1 Comments:
இயற்கை எழுதிய காவியத்திற்கு
அழகிய வார்த்தைகளால் உயிர் கொடுத்த
கலைஞனுக்குப் பாராட்டுக்கள்!!!
இயற்கை அழகு! அதைவிட என் அண்ணனின்
ரசனையும் அழகு!
Post a Comment
<< Home