படமும் செய்தியும்

Wednesday, May 21, 2008

"செமகுத்து" - னா அது இதாங்க!
முதன்முதல் காதுகுத்தலைக் கண்டுபிடித்தவன், இந்தப்பெண்மணியை காண நேர்ந்தால் என்ன நினைப்பான்/செய்வான்? என்ன வேண்டுதலோ? அம்மணி இப்படி முகம் முழுக்க‌ இப்படி குத்தோகுத்து என்று குத்திக்கொண்டார் என்று நினைக்கிறீர்களா? சரி அதை விடுங்கள். தோராயமாக முகத்தில் எத்தனை மாட்டல்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சரியாக 5920 மாட்டல்களைக் குத்தி உலகிலேயே மிக அதிகமான மாட்டல்களை குத்தி மாட்டியவர் என்று கிண்ணஸ் ரெக்கார்ட் சான்று வழங்கிவிட்டது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரருகேயுள்ள ராயல் மைல் எனற இடத்தைச் சார்ந்த எலைன் டேவிட்சன் தான் இவர்! என்ன, எப்படி இவர் சாப்பிடுவார்ன்னு பாக்கிறீங்களா? அது அவரோட கவலைங்க!

காலை டிபன் ரெடி! சாப்பிடலாமா?
ஹேம்பர்கர்,கொஞ்சம் உருளை வறுவல்,கொஞ்சம் சாலட் அவ்வளவுதான்! நேத்திக்குவரை இந்த காலைச் சிற்றுண்டி வெறும்$150டாலர்தான்! ஆனா, இன்னையிலிருந்து வெலவாசி ஏறிப்போனதால கொஞ்சம் வெலையை கூட்டிருக்கோம்ன்னு நியூயார்க் வால் ஸ்ட்ரீட் பர்கர் ஷாப்பி அறிவித்துள்ளது. எவ்ளோ? 175டாலர்! நம்ம ஊர் ரூபாயில் சும்மா 700ரூபாய்! ஒரு பர்கர் நாலுரூபாய் விக்குது! ஆன நியூயார்க் நகரத்துல இந்தக் கடை எப்பவும் காஸ்ட்லியான கடைதாங்க!
என்ன வாய தெறந்துகினு ப்ளேட்ல இருக்குறத லவட்டுறதுக்கா? இல்ல வெலையப் பாத்தா?



இது எந்த கெரகத்துல இருந்து? செவ்வாயா? புதனா? என்று நீங்கள் வடிவேல் ஸ்டைலில் கேட்டுக்கிட்டு இருக்காதீங்க!

ஹெச் ஐ வி, எய்ட்ஸ் இதெல்லாத்தோடயும் வாழ்க்கையில போராடிக்கிட்டு இருக்குறவங்களுக்காக நிதி திரட்டியளிக்க 16வது ஆண்டு வாழ்க்கை பந்து நிகழ்ச்சியில் வியன்னாவின் சிட்டிஹாலில் நூதன அலங்காரத்தில் தோன்றும் பெண் தான் இவர்!

Tuesday, April 24, 2007

நிழற்படக் கலையில் நிஜமாகும் நிழல்கள்!!




எதுநிஜம்? எது உண்மை?





இந்தப்பூனையும் மீன் குடிக்(திங்)குமோ!?



இது பறவைத் தேனீ!!



இது விரல்கள் பேசும் ரகசிய மொழி!!


எவ்வுயிர்க்கும் உலகப் பொதுவான

வேசமில்லா நேசம் இது...!


தண்ணிதவுளு போடாமலே ரெண்டிரண்டா தெரியுதே...!


மின்னொளிக்குளியளில் தனிமை மின்னலாய் இந்த.....!



இது என்னோட ஸ்டைலாக்கும்....!


ஸ்மைல் ப்ளீஸ்...!



மீன்குஞ்சுகளுக்கு அப்பால் சின்னஞ்சிறு பிஞ்சுகள்...!

மரமே வீடாய்...வீடே மரமாய்...!


!!பருவகாலப் பரவசங்கள்!!



வாச வலை வீசி எம்மை அடிமைப்படுத்தும் பூக்காடே!


நீலக்கடல் வானத்தை வசப்படுத்தியதோ!

மரங்களின் சோகங்களை மறைந்திருந்து

பார்ர்க்கிறதோ இந்தக் குளிர் நிலவு?

ஒரு மில்லியன் டிகிரி வெப்பத்தைக் கக்கினாலும்

உன் கதிர் கரங்களை இதமாய் எங்களை நோக்கி

அனுப்பும் ரகசியம் சொல்வாயா?

எழுத்தாளர்களின் பாடுபொருளே மரங்களின்
எச்சமாய்ச் சொச்சமாய் நீ சொல்லும் சேதிதான்
என்ன?

நிர்வாணமாய் நிற்கும் என்னைப் பார்த்து

நீ நாணும் அழகே தனிதான்!



சிறகுகள் உதிர்த்து மரித்த சோகத்துக்கு வெண்பட்டு
விரித்து எம்மை குளிர்ச்சிப்படுத்துகிறாயோ!




நிறம் மாறும் இலைப்பூக்ள்!



உயிர் துறக்கும் முன்புகூட உங்கள் கண்ணுக்கு

விருந்து படைத்துப் போவேன்!




சூரியப் பூக்களே நீங்கள் மலர்ந்து
சிரிப்பது யாருக்காக?




எம் தாகம் தீர்க்க அடித்துப் புரண்டுவரும்

அழகு நதியே நீயின்றி நாங்களில்லை!



இலைகள் உங்களை விட்டுப்போனால் என்ன?

உங்களைப் போர்த்திக் கெளரவிக்க நானில்லையா

என்று பூமிச் சபையில் வெண்பட்டு போர்த்தி

மகிழ்கிறாயோ?

Wednesday, December 13, 2006

A frog made of cans are seen as part of the 14th annual 'Canstruction' design
competition and food drive in New York, Thursday, Nov. 9, 2006.
The exhibit, which features 41 objects built from cans,
will be open to the public through Nov. 22, 2006.

Cities across North America will be sponsoring similar food drives
to create more than 600 structures and donate more than
two million pounds of food.

Thursday, July 13, 2006

கடலுக்குள் நீந்தும் கார் இது!
கடலுக்கடியில் மூழ்கிவிட்ட காரோ என்று எண்ணாதீர்கள்? கடலுக்குள் நீந்தும் கார் இது. சுவிஸ் கண்டுபிடிப்பான இந்தக்கார் கடலுக்கடியில் 32.8 அடிவரை மீனைப்போல் விரைந்து செல்லும். எதிர்வரும் மார்ச் 6-ம் தேதி முதல் 16-ம் தேதிவரை சர்வ தேச‌ ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் இந்த "சப்மரைன் கார்" இடம் பெறவுள்ளது. விலை இன்னும் முடிவாகவில்லை.
பார்த்தோரை வாய்விட்டு "வாவ்" சொல்லவைத்த ஜடாமுடி நாய்!

நியூயார்க் நட்சத்திர ஹோட்டலில் விருந்து சாப்பிடும் "ஊனோ"

ஆஹா..நாய்க்கு சடைபோட்டு அழகுபார்க்கிறார்களோ! ப்யூர் ப்ரெட் என்ற வகையைச் சேர்ந்த இந்தநாய் நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்க்கண்காட்சிக்குத்தான் இந்த சிறப்பு சடை அலங்காரம்! சடையழகில் மயங்கியாவது எனக்கு பரிசு தரமாட்டார்களா என்று வந்த இந்த நாயை வென்ற ஊனோ முதல்பரிசைத் தட்டிச்சென்றது.

ஆட்ட நாயகருக்கு முடிசூடி மகிழ்கிறார்களோ! இல்லை..இல்லை இவர் கோழிக்கறிசாப்பிடுவதில் சாம்பியன் பட்டம் வென்றவர்! பிலடெல்பியாவில் 241 கோழி இறக்கைகளை கபகபவென்று கடித்து மென்று தள்ளி "விங் பவுல் சாம்பியன்" பட்டத்தை வென்றார்.

தின்றார்!வென்றார்!முடிசூட்டினார்கள்!!!

இந்த பட்டாம்பூச்சி தேவதை எங்கோ பறக்கத் தயாராகிவிட்டதோ?

உனக்கே விசிறிகள் காத்திருக்கும்போதுஉன் தலையில்வேறா?
நான் ஒரு ஆக்டோபஸ், என்னை நெருங்கினால் அவ்வளவுதான்என்கிறாரோ!

நிச்சயமாய் நான் செவ்வாயில் இருந்த பெண் அல்ல!


One teacher said "I felt like they were all moving....but slowly. Kind of like, they were breathing."
The picture attached here are used to test the level of stress a person can handle.The slower the pictures move, the better your ability of handling stress.Alleged criminals tested say they were seeing them spinning around madly; however, senior citizen and kids see them standing still. None of these images are animated-they are perfectly still.Feel stressed out, get aware of your stress levels. It ain't good if the images were rocking.

Sunday, July 02, 2006

கேன்களில்.... வியப்பூட்டும் உருவங்கள்......






கேன்களில்...

கைவண்ணம் கண்டார்....!

எலுமிச்சைகளும்
ஆரஞ்சும்



கண்கவர் நிறங்களில்













அழகு உருவங்களில் அற்புதமாய் கண்களுக்கு விருந்து படைக்கிறது...!